என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "buffalo burst"

    • ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
    • டேபிள், சோ்கள் உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தியது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூரை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் பல்வேறு வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக இங்குள்ள நகரப் பகுதியில் சுற்றி வரும் காட்டெருமைகள் அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில் குன்னூா் ஜிம்கானா கிளப் சாலை பகுதியில் உள்ள தனியாா் பங்களா வளாகத்துக்குள் நுழைந்த காட்டெருமை அங்கு வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த டேபிள், சோ்கள் உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தியது.

    இதனால், அங்கிருந்த ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனா். இந்த காட்டெருமையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

    ×