search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Budget2019"

    பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வரலாற்றில் இடம்பெறும் என பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்தார்.#BudgetSession #Budget2019 #PresidentRamNathKovind
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    நாம் அனைவரும் அம்பேத்கர் மற்றும் மகாத்மா காந்தியின் வழியினை பின்பற்ற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி, மக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்துள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவே இரவு பகலாக உழைத்து வருகிறது. அவர்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இவ்வகையில் இந்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாகும்.



    ஏழை எளிய மக்களுக்கு உதவிடவே மத்திய அரசு கடுமையாக உழைக்கிறது. இதனை முன்னிட்டு  ஆயுஷ்மான் பாரத் யோஜனா எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 4 மாதத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஏழை, எளிய பெண்களின் தரத்தினை மேலும் உயர்த்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 75000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

    மேலும் கல்வித் தரத்தை மேம்படுத்த மாணவர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை உருவாக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் வரலாற்று சிறப்பு பெறூம் வகையில், மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.  மேலும் ஜன்தன் திட்டத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் 34 கோடியில் புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்க நாடு முழுவதும் 9 கோடிக்கும் மேலான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விரைவிலேயே மின்சாரம் இல்லாத வீடே இல்லை எனும் நிலை உருவாக்கப்படும். இவையனைத்துக்கும் மேலாக பொது பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #BudgetSession #Budget2019 #PresidentRamNathKovind

    ×