search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BSNL Broadband"

    பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விலை ரூ.99 முதல் துவங்குகிறது.
    புதுடெல்லி:

    பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு நான்கு புதிய பிராட்பேன்ட் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி டேட்டாவில் துவங்கி, 20Mbps வேகத்தில் கிடைக்கும் சலுகைகள் விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு, முதல் முறை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    புதிய வாடிக்கையாளர்களை இணைக்கும் நோக்கில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.99 விலையில் துவங்கும் புதிய சலுகைகள் அதிகபட்சம் ரூ.399 வரை கிடைக்கிறது. இவற்றில் மாதம் 45 ஜிபி-இல் துவங்கி அதிகபட்சம் 600 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    முன்னதாக ஜியோ ஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் 100Mbps வேகத்தில் மாதம் ரூ.1000-குள் கட்டணம் கொண்டிருக்கும் என்றும், ஜியோ டிவி சேவைகள் மற்றும் அன்லிமிட்டெட் அழைப்புகள் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து பிஎஸ்என்எல் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    BBG ULD காம்போ என அழைக்கப்படும் பிஎஸ்என்எல் புதிய சலுகைகளில் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா 20Mbps வேகத்தில் வழங்கப்படும் என்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய சேவைகளில் நாடு முழுக்க அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    பி்எஸ்என்எல் BBG காம்போ ULD துவக்க சலுகைகள் 45 ஜிபி டேட்டா என தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவு அனைத்து சலுகைகளுக்கும் பொருந்தும். பிஎஸ்என்எல் BBG காம்போ ULD 150 ஜிபி சலுகை ரூ.199 விலையில் தினமும் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 


    கோப்பு படம்

    இறுதியில் BBG காம்போ ULD 300 ஜிபி மற்றும் 600 ஜிபி டேட்டா முறையே ரூ.299 மற்றும் ரூ.399 விலையில் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் தினமும் முறையே 10 ஜிபி மற்றும் 20 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் 20Mbps வேகத்திலும் டேட்டா வழங்கப்படுகிறது, டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 1Mbps ஆக குறைக்கப்படுகிறது. டேட்டா வேகம் ஒவ்வொரு நாளும் அதிகாலை 12.00 மணிக்கு ரீஸ்டோர் செய்யப்படும்.  

    புதிய பிஎஸ்என்எல் சலுகைகளுடன் இலவச மின்னஞ்சல், 1 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. விளம்பர சலுகை என்பதால் 90 நாட்களுக்கு மட்டுமே இது பொருந்தும், ஆறு மாதத்திற்கு பயன்படுத்தியதும், வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் வழங்கும் மற்ற சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இத்துடன் முன்பணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் பிஎஸ்என்எல் பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1199 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் ஃபேமிலி பிளான் என அழைக்கப்படும் புதிய சலுகையில் பிராட்பேன்ட் இணைப்புக்கு மொபைல் டேட்டா வழங்குகிறது. 

    பிராட்பேன்ட் இணைப்பு மற்றும் பிஎஸ்என்எல் பிரீபெயிட் கனெக்ஷன்களுக்கு இந்த சலுகையில் 10Mbps வேகத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்தியா முழுக்க அறிவிக்கப்பட்ட சலுகையில் 10Mbps பிராட்பேன்ட் இன்டர்நெட் மாதம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    பிஎஸ்என்எல் நிறுவன பிராட்பேன்ட் மற்றும் ஃபைபர் பிராட்பேன்ட் சேவைகளை பயன்படுத்துவோருக்கு கூடுதலாக வாய்ஸ் கால் அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பிஎஸ்என்எல் நிறுவன பிராட்பேன்ட் பயனர்களுக்கு கூடுதலாக வாய்ஸ் கால் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவன ஃபைபர் பிராட்பேன்ட் அல்லது பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்துவோருக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது.

    சில சலுகைகளில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் எண்களுக்கு மட்டும் அழைப்புகள் வழங்கப்படும் நிலையில், சில சலுகைகளில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. ஜூன் 1-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையானது ஜியோ ஃபைபர் திட்டத்துக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சலுகையின் மதிப்பு மற்றும் ரீசார்ஜ் சலுகைகளை வைத்து பிஎஸ்என்எல் பிராட்பேன்ட் சேவைகள் மாறுபடும். ரூ.249 முதல் ரூ.645 விலையிலான சலுகைகளை தேர்வு செய்வோருக்கு பிஎஸ்என்எல் எண்களுக்கு அன்லிமி்ட்டெட் வாய்ஸ் கால் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலும் இந்த சலுகைகள் இரவு நேரத்தில் இலவச அழைப்புகளை அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்குகின்றன. ரூ.645 மற்றும் இதற்கும் அதிக தொகை மதிப்புள்ள சலுகைகளை தேர்வு செய்வோர் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.


    கோப்பு படம்

    பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேன்ட் சலுகையின் டேட்டா அளவு இருமடங்கு அதிகரிக்கப்பட்டது. சமீபத்தில் மூன்று ஃபைபர் பிராட்பேன்ட் சலுகைகளை பிஎஸ்என்எல் மாற்றியமைத்தது. ரூ.1045, ரூ.1395 மற்றும் ரூ.1895 சலுகைகளில் கூடுதலாக அதிகபட்சம் 200 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்பட்டது. இத்துடன் ஞாயிற்று கிழமைகளில் வழங்கப்படும் இலவச அழைப்புகள் நீட்டிக்கப்பட்டன.

    விரைவில் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் ஃபிக்சட்-லைன் பிராட்பேன்ட் சேவைகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் போட்டியை எதிர்கொள்ள முன்கூட்டியே தனது சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது. முதற்கட்டமாக ஜியோ ஃபைபர் சலுகைகளில் 1100 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ ஃபைபர் அறிவித்து இருக்கும் புதிய சலுகையில் 100 ஜிபி இலவச டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.

    சமீபத்தில் பிஎஸ்என்எல் பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1199 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் ஃபேமிலி பிளான் என அழைக்கப்படும் புதிய சலுகையில் பிராட்பேன்ட் இணைப்புக்கு மொபைல் டேட்டா வழங்குகிறது. பிராட்பேன்ட் இணைப்பு மற்றும் பிஎஸ்என்எல் பிரீபெயிட் கனெக்ஷன்களுக்கு இந்த சலுகையில் 10Mbps வேகத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்தியா முழுக்க அறிவிக்கப்பட்ட சலுகையில் 10Mbps பிராட்பேன்ட் இன்டர்நெட் மாதம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    ×