என் மலர்
முகப்பு » brother death
நீங்கள் தேடியது "brother death"
செய்யாறு அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்த அண்ணன் சாவு தம்பிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள கீழ்புதுப்பாக்கம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் இவரது தம்பி கோபி (வயது 34) இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்தனர்.
இருவருக்கும் மது பழக்கம் இருந்து வந்தது. இதனால் ஊரை சுற்றிலும் கடன் தொல்லை அதிகமானது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு தொந்தரவு செய்ததால் மனமுடைந்த 2 பேரும் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர்.
இதனை கண்ட உறவினர்கள் 2 பேரையும் மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புருஷோத்தமன் நேற்று இறந்தார்.
கோபி சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
X