search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bright"

    • இன்று நிலவு பூமியின் மேற்பரப்பில் இருந்து 3,57,530 கிலோமீட்டர் தொலைவிலேயே இருக்கும்
    • இதே போன்று மீண்டும் ஒரு நிகழ்வு 2037-ல் நடைபெறும்

    எப்போதாவது மட்டுமே தோன்றக்கூடிய ஒரு அபூர்வ நிகழ்வு, இன்று வானில் நடைபெற போகிறது.

    சூப்பர் மூன் எனப்படும் இந்த நிகழ்வில் வழக்கமான முழு அளவை விட நிலவு சற்று பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும்.

    நிலவோ அல்லது ஒரு செயற்கைகோளோ அதனுடைய சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வருகின்றபோது அது பெரிஜி என அழைக்கப்படும். அவ்வாறு நிலவு வரும்போது அதன் அளவு பெரியதாகவும், அதிக ஒளியுடன் பிரகாசமாகவும் தெரியும்.

    இன்று நிலவு பூமியின் மேற்பரப்பில் இருந்து 3,57,530 கிலோமீட்டர் தொலைவிலேயே இருக்கும். அதனால் பூமியின் மீது அதிக ஒளி வீசப்படும்.

    வானியலில் பெரிஜி-சிஜிஜி (perigee-syzygy) என இந்த நிகழ்வு அழைக்கப்பட்டாலும், பார்க்க மிக அழகாக வசீகரிக்கும் விதத்தில் நிலவு தென்படுவதால், இது வழக்கத்தில் "சூப்பர் மூன்" என அழைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன், ஜூலை மாதம் தோன்றியது.

    2023-ம் ஆண்டின் 4-வது மற்றும் கடைசி சூப்பர் மூன் செப்டம்பர் மாதத்தில் நிகழும்.

    ஆகஸ்ட் மாதம் 2 சூப்பர் மூன் தோன்றும் நிகழ்வு, இதற்கு முன்பு கடைசியாக 2018-ல் நடந்தது.

    இதே போன்று மீண்டும் ஒரு நிகழ்வு 2037-ல் நடைபெறும்.

    ஆகஸ்ட் 1-ம் தேதி சூப்பர் மூன் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தென்கிழக்கு அடிவானத்திற்கு மேலே எழும்போது முழுமையானதாகவும் பிரகாசமாகவும் தோன்றும். ஆகஸ்ட் 2-ம் தேதி நள்ளிரவு 12.02 மணிக்கு இந்தியாவில் இதனை காண முடியும்.

    இந்த மாதத்தின் 2-வது சூப்பர் மூன் ஆகஸ்ட் 31 அன்று நடக்கும். ஆனால், அது காலை 7.05 மணிக்கு உச்சம் அடையும் என்பதால் இந்தியாவில் அது தெரிய வாய்ப்பில்லை.

    ×