என் மலர்
நீங்கள் தேடியது "Borwell lorry"
- கொடைக்கானல் மேல்மலை, கீழ் மலைப்பகுதிகளில் போர்வெல், ஜே.சி.பி. போன்ற வாகனங்கள் இயக்க அனுமதி கிடையாது. ஆனால் சட்ட விரோதமாக இயக்கப்படுகிறது.
- அதிகாரிகள் உடந்தையுடன் சட்ட விரோதமாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் மேல்மலை, கீழ் மலைப்பகுதிகளில் போர்வெல், ஜே.சி.பி. போன்ற வாகனங்கள் இயக்க அனுமதி கிடையாது. ஆனால் சட்ட விரோதமாக இயக்கப்படுகிறது.
நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை அரசு அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அரசு அதிகாரிகள் கண்டும் காணாமலும் உள்ளனர். எனவே இதுகுறித்து தனிஅதிகாரிகளை உடனே நியமித்து முறையாக விசாரணை நடத்தி கொடைக்கானல் மேல்மலை, கீழ் மலை மலைப்பகுதிகளில் சட்ட விரோதமாக இயங்கும் போர்வேல்,
கிட்டாட்சி, ஜே.சி.பி. போன்ற வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு தாண்டிக்குடியில் திருட்டுத்தனமாக போர்வெல் லாரி இயக்கப்பட்டது.
இது குறித்து கொடைக்கானல் ஆர்.டி.ஓ. கூறுகையில், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வத்தலகுண்டு வனத்துறையினர் கூறுகையில், போர்வெல் லாரி எந்த வழியில் வந்தது என்று தெரியவில்லை என்றனர். தா
ண்டிக்குடி கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது தான் விடுமுறையில் உள்ளதாக கூறினார். அதிகாரிகள் உடந்தையுடன் சட்ட விரோதமாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இனிமேலாவது கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






