என் மலர்
நீங்கள் தேடியது "Booker Prize"
- 2022ம் ஆண்டுக்கான புக்கர் பரிசு இலங்கை எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- புக்கர் விருதை வென்றதற்காக 50,000 பவுண்ட் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
லண்டன்:
இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருது புக்கர் விருது ஆகும். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலகா எழுதிய தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போர் குறித்து இந்த நாவல் அமைந்துள்ளது. புக்கர் விருதை வென்றதற்காக 50,000 பவுண்ட் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
இறுதிப் போட்டிக்கு தேர்வான 6 புத்தகங்களில் இருந்து இலங்கை எழுத்தாளர் எழுதிய புத்தகத்துக்கு புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது.
புக்கர் பரிசை பெறும் இரண்டாவது இலங்கை எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- எழுத்தாளர் டேம் ஹிலாரி மாண்டலின் மரணத்தால் நாங்கள் மனம் உடைந்துள்ளோம்.
- அற்புதமான பணியை அவர் எங்களுக்கு விட்டுச் சென்றதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
புக்கர் பரிசு பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் (70) காலமானார். இதுகுறித்து அவரது வெளியீட்டாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து 4வது எஸ்டேட் புக்ஸ் கூறுகையில், " எங்கள் அன்பான எழுத்தாளர் டேம் ஹிலாரி மாண்டலின் மரணத்தால் நாங்கள் மனம் உடைந்துள்ளோம். மேலும், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், குறிப்பாக அவரது கணவர் ஜெரால்ட்ருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது ஒரு பேரழிவு தரும் இழப்பு. அத்தகைய அற்புதமான பணியை அவர் எங்களுக்கு விட்டுச் சென்றதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம் முடியும்" என்று குறிப்பிட்டார்.






