search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bonded Labor"

    • 30-ந்தேதி முதல் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • விழுதுகள் அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொழிலாளர் துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுரையின்படி, கடந்த மாதம் 30-ந்தேதி முதல் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    கொத்தடிமை தொழிலாளர் குறித்து பொதுமக்களிடம் தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு நோட்டீசு வழங்கப்பட்டது. திருப்பூரில் நடந்த புத்தக திருவிழாவில் கையெழுத்து இயக்கம், பள்ளி குழந்தைகள் மூலம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    கொத்தடிமை தொழிலாளர் தொடர்பான உறுதிமொழியை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில், கொத்தடிமை தொழிலாளர் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, கவிதைகள் வாசித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், விழுதுகள் தன்னார்வ தொண்டு அமைப்பினர், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், தொழிலாளர் துறையை சேர்ந்த அலுவலர்கள் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தொழிலாளர் துறை, தன்னார்வலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருப்பூர் மத்திய பஸ் நிலையம் முன் நடைபெற்றது. பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர் முறை பற்றி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான மேகலா மைதிலி, தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் வக்கீல்கள், விழுதுகள் அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    ×