search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bodi-Chennai train service"

    • ரெயில்நிலையத்தில் தண்ட வாளங்கள் சீரமைக்கப்பட உள்ளதால் பல ரெயில்களின் நேரங்கள் மாற்றம், ரத்து, பகுதிதூர ரத்து, தாமதமான இயக்கம், சுற்றுப்பாதையில் இயக்கம் போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டு ள்ளன.
    • தேனி ரெயிலும் அடங்கும். தண்டவாள சீரமைப்பு பணிகள் காரண மாக வருகிற 19-ந்தேதி முதல் தொடங்க இருந்த போடி-சென்னை ரெயில் சேவை ஒத்தி வைக்கப்பட்டு ள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    மதுரை-போடி இடையே இயக்கப்பட்ட பீட்டர்கேஜ் ரெயில் கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் நிறுத்த ப்பட்டது. அகல ரெயி ல்பாதை பணிகள் நடை பெற்று வந்தநிலையில் பல ஆண்டுகளாக ரெயில் சேவை இல்லாத மாவட்ட மாக தேனி இருந்து வந்தது.

    இதனைதொடர்ந்து பொதுமக்களின் போரா ட்டம் மற்றும் பல்வேறு நடைபயணம் உள்ளிட்ட பிரச்சினைகளை கடந்து மதுரையில் இருந்து உசில ம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வரை அகலரெயி ல்பாதைகள் முடிக்கப்ப ட்டன. கடந்த ஆண்டு மே மாதம் 27-ந்தேதி முதல் தேனி வரை பயணிகள் ரெயில் இரு மார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து தேனி-போடி இடையே 15 கி.மீ தூரத்தில் பணிகள் முடிவடைந்த நிலையில் தேனி வரை இயக்கப்பட்ட பயணிகள் ரெயிலும், சென்னையில் இருந்து மதுரை வரை இயக்கும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் வருகிற 19-ந்தேதி முதல் போடி வரை நீட்டிக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்தது.

    இந்நிலையில் மதுரை ரெயில் நிலையத்தில் தண்ட வாள சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இத ன்காரணமாக ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்ய ப்பட்டுள்ளது. இதன்படி பிப்ரவரி 9-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தேனியில் இருந்து மதுரைக்கு மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரெயில் 30 நிமிடம் தாமதமாக 6.45 மணிக்கு புறப்படும். பிப்ரவரி 15-ந்தேதி தேனியில் இருந்து மதுரைக்கு ரெயில் இயக்கம் நிறுத்த ப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 16-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை இருமார்க்கமாகவும் ரெயில் இயக்கம் நிறுத்தி வைக்்க ப்படுவதாக அறிவிக்கப்பட்டு ள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே த்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், மதுரை ரெயில்நிலையத்தில் தண்ட வாளங்கள் சீரமைக்கப்பட உள்ளதால் பல ரெயில்களின் நேரங்கள் மாற்றம், ரத்து, பகுதிதூர ரத்து, தாமதமான இயக்கம், சுற்றுப்பாதையில் இயக்கம் போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டு ள்ளன.

    இதில் தேனி ரெயிலும் அடங்கும். தண்டவாள சீரமைப்பு பணிகள் காரண மாக வருகிற 19-ந்தேதி முதல் தொடங்க இருந்த போடி-சென்னை ரெயில் சேவை ஒத்தி வைக்கப்பட்டு ள்ளது. 12 ஆண்டுகளாக ரெயில் சேவைக்காக காத்தி ருக்கும் போடி மக்கள் தங்கள் ஊருக்கு ரெயில்வ ரும் என்று எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் இந்த ரெயில் இயக்கம் ஒத்தி வைக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ×