என் மலர்
நீங்கள் தேடியது "blackmailing boss"
பிரபல இ-வாலட் நிறுவனமான பேடிஎம் அதிபரிடம் ரூ.20 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். #PAYTM #Employee #Blackmailing #VijayShekharSharma
நொய்டா:
பிரபல இ-வாலட் நிறுவனமான பேடிஎம்-ஐ நிறுவியவர் விஜய் சேகர் சர்மா. இந்நிறுவனத்தின் தலைமையகம் டெல்லி அருகே நொய்டாவில் உள்ளது.
அதில், அதிபரின் செயலாளராக பணியாற்றும் ஒரு பெண், தன் கணவர் ரூபக் ஜெயின், சக ஊழியர் தேவேந்திர குமார் ஆகியோருடன் சேர்ந்து அதிபரின் தனிப்பட்ட தகவல்களை திருடி வைத்துக்கொண்டு, அவரை பிளாக்மெயில் செய்தனர்.
அந்த தகவல்களை வெளியிட்டால், நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும், நற்பெயர் கெட்டுப்போகும் என்றும் எனவே, வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், ரூ.20 கோடி தர வேண்டும் என்றும் மிரட்டி வந்தனர். இதுபற்றி நொய்டா போலீசில் விஜய் சேகர் சர்மா புகார் செய்தார்.
அதன்பேரில், அந்த பெண் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 4-வது நபரான ரோகித் சோமல் என்பவனை தேடி வருகிறார்கள். #PAYTM #Employee #Blackmailing #VijayShekharSharma