search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Black Sand"

    • சூரிய உதயத்தில் ஒளிரும் கருப்பு மணல் பகுதியை பார்த்து உற்சாகம் அடைந்தனர்.
    • கடல் அலையில் இருந்து வெளிவரும் இந்த கருப்பு மணல் கடற்கரையில் படிந்து தார் சாலை போன்று காட்சி அளிக்கிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டு செல்கிறார்கள். சுற்றுலா வரும் பார்வையாளர்கள் மாமல்லபுரம் கடற்கரையில் பொழுதை கழிப்பது வழக்கம்.

    இந்த நிலையில் வடக்கு மாமல்லபுரம்-தேவநேரி கடற்கரை பகுதிகள் தற்போது கருப்பு மணல் கடற்கரையாக மாறி வருகிறது. கடல் அலையில் இருந்து வெளிவரும் இந்த கருப்பு மணல் கடற்கரையில் படிந்து தார் சாலை போன்று காட்சி அளிக்கிறது. மேலும் அதிகாலை சூரிய வெளிச்சத்தில் இந்த கருப்ப மணற்பகுதி ரம்யமாக காணப்படுகிறது.

    வித்தியாசமாக மாறி வரும் கடற்கரையில் ரிசார்ட்களில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் இன்று அதிகாலை நடைபயிற்சி சென்றபோது பார்த்து வியந்தனர். சூரிய உதயத்தில் ஒளிரும் கருப்பு மணல் பகுதியை பார்த்து உற்சாகம் அடைந்தனர். அந்த கருப்பு நிற மணலை கைகளில் அள்ளி வீசி மகிழ்ந்தனர்.

    இதுபோன்ற கருப்பு மணல் எரிமலை செயல்பாடுகள் அதிகமாக காணப்படும் கடற்கரை பகுதிகளில் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது. இந்த மணலில் நடந்தால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இது போன்ற கருப்பு மணல் கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரில் உள்ள தில்மதி கடற்கரையில் இருக்கிறது. சூரிய உதயம், அஸ்தமம் நேரங்களில் மின்னும் கருப்பு கடற்கரையை பார்த்து ரசிக்க சுற்றுலா பயணிகள் அங்கு கூடுவர், தற்போது மாமல்லபுரத்தில் கருப்பு மணல் கடற்கரை காணப்படுவது இயற்கை அதிசயமாக உள்ளது என்றனர்.

    ×