search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "black ink throwing"

    • அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு.
    • அமைச்சர் மீதான மைவீச்சு தாக்குதலை கண்டித்து பாஜகவினர் போராட்டம்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சராக இருக்கும் சந்திரகாந்த் பாட்டீல், நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் சட்டமேதை அம்பேத்கர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி மகாத்மா பூலே ஆகியோர் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கு அரசு மானியம் கோரவில்லை என்று தெரிவித்திருந்தார். தமது பேச்சின்போது பிச்சை என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியது சர்ச்சையானது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புனே மாவட்டம் பிம்பிரி பகுதியில் அமைச்சர் மீது ஒருவர், கருப்பு மையை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் மீதான மைவீச்சு தாக்குதலை கண்டித்து மகாராஷ்டிரா பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஒருவர் போராட்டக்காரர்களைக் கொண்டு தன் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தக் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் பாதுகாப்பு பணியில் குறைபாடு ஏற்பட்டதாக கூறி 3 அதிகாரிகள் உள்பட 10 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புனே காவல்துறை அதிகாரி அங்குஷ் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    ×