என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP protests"

    • இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. குற்றச்சாட்டு.
    • ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட, மண்டல், அணி பிரிவு பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    ஆவின் பால் விலை உயா்வைக் கண்டித்து ஊட்டி, தலைக்குந்தா, மஞ்சூா், கூடலூா், குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க.வினர் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

    ஊட்டி ஏ.டி.சி. திடலில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் மோகன்ராஜ் தலைமை தாங்கி பேசினார்.

    அவர் கூறுகையில் ஆவின் பால் தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் 12 ரூபாயும், நீலகிரி மாவட்டத்தில் 16 ரூபாயும் விலை கூட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே சொத்து வரி, மின்சார கட்டணம், உயா்த்தப்பட்டுள்ளது. தி.மு.க. தோ்தலின்போது வாக்குறுதி அளித்த இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 என்பது உள்ளிட்ட பெரும்பாலான வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றாா்.

    இதேபோல ஊட்டி வடக்கு மண்டல் சார்பாக தலைகுந்தாவில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்பு விருந்தினராக மாவட்டத் துணைத் தலைவர் பாப்பண்ணன், மண்டல தலைவர் ஜெகதீஷ், எஸ்.டி. அணி மாவட்ட தலைவர் வினோத்குமார், விவசாய அணி மாவட்ட தலைவர் சஞ்சய், ஐடி பிரிவு மாவட்ட தலைவர் பாபு, இளைஞரணி துணைத் தலைவர் பிரம்மயோகன், வடக்கு மண்டல பொதுச்செயலாளர் நவநீதன், சிவ கணேஷ், சிவ நாகு, எஸ்டி அணி துணைத் தலைவர் ராமலிங்கன், விவசாய அணி துணைத் தலைவர் வினோதன், ரவி, சபிதா, போஜன், கணேஷ், ராஜேஷ், தேவராஜ், பாபு, யுவராஜ், ரஞ்சித் குமார், பாபு, லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    உதகை மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் எல்லநல்லி பஜாரில் மண்டல் தலைவர் ராஜ்குமார் மற்றும் மேற்கு ஒன்றிய சமூக ஊடக பிரிவு தலைவர் சந்தோஷ் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார. இதில் மாவட்ட, மண்டல், அணி பிரிவு பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

    ×