search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP govt in Karnataka"

    கர்நாடகாவில் பா.ஜ.க. கட்சி ஆட்சி அமைத்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி நாளை தர்ணா போராட்டம் அறிவித்துள்ளது. #RJDdharna #BJPgovtinKarnataka
    பாட்னா :

    கர்நாடகாவில் பெரும்பான்மை பெறாத நிலையில் பா.ஜ.க. ஆட்சியமைத்ததை கண்டித்து லாலு பிரசாத் யாதவின் ராஷ்ரிய ஜனதா தளம் கட்சி நாளை தர்ணா போராட்டம் அறிவித்துள்ளது.

    பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ரகுவன்ஷ் பிரசாத் சிங், ‘தனிப்பெரும்பான்மை இல்லாமல் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைத்தற்கு  ராஷ்ரிய ஜனதா தளம் கட்சி கண்டனம் தெரிவிகின்றது.

    மேலும், இதை எதிர்த்து பீகார் தலைநகர் பாட்னாவில் மிகப்பெரிய அளவில் தர்ணா போராட்டம் நடைபெறும். இதில், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மட்டுமல்லாமல் கட்சியின் அணைத்து முன்னணியினர் மற்றும் தொண்டர்களும் பங்கேற்க உள்ளனர். கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் நாளை தர்ணா போராட்டம் நடைபெறும்’ என தெரிவித்துள்ளார்.

    பெரும்பான்மை இடங்களை வைத்துள்ள காங்கிரஸ்- மஜத கூட்டணியை புறக்கணித்துவிட்டு, எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அனுமதித்ததன் மூலம் குதிரை பேரம் நடைபெற வழிவகுத்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். #RJDdharna #BJPgovtinKarnataka
    ×