என் மலர்
நீங்கள் தேடியது "BJP Administrator Arrested"
- பெண் பணியாளர்கள் மோடி பிரசாத்தை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- அம்பிகா அளித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் மோடிபிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஸ்ரீராமபுரம் ஊராட்சி பூத்தாம்பட்டி பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பா.ஜ.க. திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் மோடிபிரசாத் (வயது40) என்பவர் பணித்தள பொறுப்பாளர் அம்பிகாவிடம் கட்சி நிதியாக ஒவ்வொரு பணியாளரிடம் இருந்து ரூ.50 வசூலித்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தெரிந்ததும் பெண் பணியாளர்கள் மோடி பிரசாத்தை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இனிமேல் பணம் கேட்டு வரமாட்டேன் என அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டனர். இந்த நிலையில் அம்பிகா அளித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் மோடிபிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






