என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Binny Bansal"

    • ப்ளிப்கார்ட்-இல் தனது பங்குகளை விற்பனை செய்தார்.
    • தலைமை பன்பு அடங்கிய குழு நிர்வகிக்கிறது.

    ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பின்னி பன்சால் நிர்வாக குழுவில் இருந்து அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் பன்சால் உடன் இணைந்து துவங்கிய நிறுவனத்தில் இருந்து பின்னி பன்சால் வெளியேறுகிறார். முன்னதாக இவர் ப்ளிப்கார்ட்-இல் தனது பங்குகளை விற்பனை செய்தார்.

    "கடந்த 16 ஆண்டுகளில் ப்ளிப்கார்ட் குழுமம் அடைந்திருக்கும் வளர்ச்சியை நினைத்து பெருமையாக உணர்கிறேன். ப்ளிப்கார்ட் தற்போது முன்னணி இடத்தில் உள்ளது. இதனை உறுதியான தலைமை பன்பு அடங்கிய குழு நிர்வகிக்கிறது."

    "அதன் எதிர்காலம் தெளிவான குறிக்கோளை நோக்கி முன்னேறும் நம்பிக்கையில், நான் வேறு பாதையில் பயணிக்க முடிவு செய்துவிட்டேன். நிறுவனம் தகுதி வாய்ந்தவர்கள் கையில் இருப்பதை அறிந்து இந்த முடிவை எடுத்திருக்கிறேன்."

    "துறையில் தொடர்ந்து கடினமான போட்டியாளராக இருந்து கொண்டு, வாடிக்கையாளர் அனுபவங்களை தொடர்ந்து மாற்றுவதற்கு குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று பின்னி பன்சால் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். 

    ஆன்-லைன் வர்த்தகத்தில் புகழ் பெற்ற ‘பிளிப்கார்ட்’ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து பின்னி பன்சால் விலகி உள்ளார். #Flipkart #CEO #BinnyBansal #Resign
    புதுடெல்லி:

    பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு 2007-ம் ஆண்டு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமாக ‘பிளிப்கார்ட்’ நிறுவனம் தொடங்கப்பட்டது. இது ஆன்-லைன் வர்த்தகம் என்று சொல்லப்படுகிற இணையவழி வர்த்தகத்தில் புகழ் பெற்றது.

    சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிறுவனத்தை அமெரிக்க ஆன்-லைன் சந்தையில் கொடிகட்டிப் பறக்கிற ‘வால்மார்ட்‘ நிறுவனம் வாங்கியது.



    இந்த நிலையில் திடீரென ‘பிளிப்கார்ட்’ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து பின்னி பன்சால் விலகி உள்ளார். உடனடியாக அவரது ராஜினாமா அமலுக்கு வந்துள்ளது.

    இதுபற்றி வால்மார்ட் விடுத்துள்ள அறிக்கையில், “பின்னி பன்சால் மீது தனிப்பட்ட தவறான நடத்தை புகார்கள் எழுந்தன. அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர் மீதான புகார்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த ஒட்டுமொத்த விவகாரமும் கவனத்தை சிதறடித்து விடும் என கருதி அவர் விலகி உள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

    பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Online #Flipkart #CEO #BinnyBansal #Resign
    ×