என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Biman Falls"

    • சிறப்பு பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
    • விடுமுறை நாட்களில் ஏராளமானோர் குவிந்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ஜமுனாமரத்தூர் மலை கிராமம் உள்ளது. இந்த பகுதியில் பீமன் நீர்வீழ்ச்சி, சுற்றுச்சூழல் பூங்கா, கோலப்பன் ஏரி போன்றவை உள்ளன.

    கொட்டும் அருவி

    கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.

    ஜமுனாமரத்தூர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. இதனால் ஜமுனாமரத்தூரில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஜில்லென்ற காற்று வீசுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், விடுமுறை நாட்களில் ஏராளமான குவிந்தனர்.

    நேற்று புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் பீமன் அருவியில் ஆனந்த குளியல் போட்டனர்.

    விடுமுறை நாட்களில் பீமன் அருவிக்கு செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×