search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bilawal Bhutto Zardari"

    • 12 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மந்திரி ஒருவர் இந்தியாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாக மாற மத்திய ஆசிய நாடுகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன.

    இஸ்லாமாபாத்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் இந்தியாவின் கோவாவில் நேற்று நடந்தது.

    இதில் பாகிஸ்தான் வெளியுறவு மந்தரி பிலாவல் பூட்டோ உள்ளிட்ட மந்திரிகள் பங்கேற்றனர். அவர்களை இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வரவேற்றார்.

    12 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மந்திரி ஒருவர் இந்தியாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு பிலாவல் பூட்டோ பாகிஸ்தானுக்கு திரும்பினார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவுக்கான எனது பயணம் வெற்றிகரமாக அமைந்தது. ஒவ்வொரு முஸ்லிமை தீவிரவாதியாக பார்க்கும் பார்வையை நிராகரிக்க உதவியது. இது போன்ற கட்டுக்கதையை உடைக்க நாங்கள் முயற்சி செய்தோம்.

    2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதிக்கு முந்தைய காஷ்மீர் நிலையை (சிறப்பு அந்தஸ்து) மீட்டெடுப்பதன் மூலம் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை இந்தியா உருவாக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.

    சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாக மாற மத்திய ஆசிய நாடுகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன என்றார்.

    முன்னதாக இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டின் வெளியுறவு மந்திரியாக இங்கு வந்த பிலாவல் பூட்டோ அதற்கேற்ப நடத்தப்பட்டார். பாகிஸ்தானின் முந்தைய ஆதாரமான பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர் மற்றும் பயங்கரவாதத்தின் செய்தி தொடர்பாளராகவே அவ ரது நிலைப்பாடுகள் கூட்டத்தில் விமர்சிக்கப்பட்டன என்று கூறினார்.

    • ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு கோவாவில் நடைபெறுகிறது.
    • 12 ஆண்டுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வந்துள்ளார்.

    பனாஜி:

    இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.

    இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு இன்றும் நாளையும் (மே 4, 5) கோவாவில் நடைபெற உள்ளது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், உறுப்பு நாடுகளுக்கு மாநாட்டில் பங்கேற்கும்படி இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. அந்த வகையில் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பூட்டோ சர்தாரிக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடிதம் அனுப்பி இருந்தார். இதற்கு பாகிஸ்தான் அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது.

    கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க கராச்சியில் இருந்து தனி விமானம் மூலம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி இன்று கோவா வந்தடைந்தார்.

    12 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×