என் மலர்
நீங்கள் தேடியது "bike robber arrested"
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகர்மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கொள்ளைகள் நடைபெற்று வந்தன. குறிப்பாக தாடிக்கொம்பு பகுதியில் காலை நேரத்தில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரத்தில் கும்பல் கொள்ளையடித்து சென்றது. மேலும் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறின. இந்த குற்ற செயல்களுக்கு கொள்ளையர்கள் பெரும் பாலும் திருட்டு மோட்டார் சைக்கிளையே பயன்படுத்தி வந்தனர்.
எஸ்.பி. சக்திவேல் உத்தரவுபடி போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியதால் செயின் கொள்ளையர்கள் பிடிபட்டனர். மேலும் குற்றச் செயல்களும் குறைந்தன.
திண்டுக்கல்- தாடிக் கொம்பு சாலையில் நகர் மேற்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் சென்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்துள்ள போலீஸ்காரர் பரமேஸ்வரன் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில் அவர் மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (வயது18) என்பதும் பைக்கை திருடியதும் தெரியவந்தது.
மேலும் சிவக்குமார் மீது நகர் வடக்கு, மேற்கு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. வேறு ஏதும் கொள்ளை கும்பலுக்கு இவருடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






