search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bhishma death"

    “அர்க்கம் என்றாலே ‘சூரியன்’ என்று பொருள். அதனால் தான் அதனை சூரியன் தலையில் சூடியிருக்கிறார். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்கஇலை.
    மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்தார். ‘நினைத்த நேரத்தில் உயிர் விடலாம்’ என்ற வரத்தினால், உத்தராயண புண்ணிய காலத்தில் உயிர் விட வேண்டி காத்திருந்தார். உரியகாலம் வந்தும் பீஷ்மரின் உயிர் பிரியவில்லை.

    அப்பொழுது அவரைப் பார்க்க வந்தார் வேதவியாசர். அவரிடம், “நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?” என்று வருந்தி கேட்டார் பீஷ்மர்.

    அதற்கு வியாசர், “பீஷ்மா! ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருப்பதும் கூடப் பாவம் தான். அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்” என்றார்.

    பீஷ்மருக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது. சபையின் நடுவே பாஞ்சாலி அவமதிக்கப்பட்டபோது, தான் ஒன்றும் செய்யாமல் அப்படியே இருந்ததே இந்த துன்பத்திற்கு காரணம் என்று உணர்ந்தார்.

    “இதற்கு விமோசனம் இல்லையா?” என்று வியாசரிடம் பீஷ்மர் கேட்டார். உடனே வியாசர், “எப்பொழுது உன் பாவத்தை உணர்ந்தாயோ, அப்பொழுதே அது அகன்று விட்டாலும், அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும்” என்றார்.

    உடனே பீஷ்மர், “சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னைப் சுட்டுப் பொசுக்குமாறு வேண்டினார்.”.

    அதற்கு மறுத்த வியாசர், எருக்க இலையை சுட்டிக்காட்டி, “அர்க்கம் என்றாலே ‘சூரியன்’ என்று பொருள். அதனால் தான் அதனை சூரியன் தலையில் சூடியிருக்கிறார். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்கஇலை. அதேபோல் பிரம்மச்சாரியான உனக்கும் இந்த எருக்க இலைக் கொண்டு அலங்கரிக்கிறேன்” என்றார். அப்படிச் செய்ததால் அவரது துன்பம் விலகி, ஏகாதசி அன்று உயிர்நீத்தார்.
    ×