என் மலர்
நீங்கள் தேடியது "bhavani police investigation"
பவானி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் மெக்கானிக் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பவானி:
பவானி அம்மன் நகர் பழனிபுரம் 1-வது வீதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மகன்முருகேசன் (வயது 31) மோட்டார் மெக்கானிக்.
நேற்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குரும்பநாயக்கன் பாளையம் விதை பண்ணை அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த அடிபட்டது.
இதில் படுகாயம்அடைந்த முருகேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினர். விபத்தில் பலியான முருகேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.