search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bareilly police station"

    உத்தரபிரதேச மாநிலத்தில் போலீஸ் நிலையத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராயத்தை எலிகள் குடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. #Rats
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பெரேய்லி மாவட்டம் மல்காமாவில் கண்டோண்மென்ட் போலீஸ் நிலையம் உள்ளது.

    அந்த பகுதியில் கள்ளச்சாராய நடமாட்டம் அதிகம் உண்டு. போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்வது வழக்கமாக இருந்தது.

    இவ்வாறு கடந்த 10 ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை போலீஸ் நிலையத்தில் பிளாஸ்டிக் கேன்களில் வைத்திருந்தனர்.

    இது சம்பந்தமான வழக்குகளுக்கு சாட்சியாக தேவைப்படும் என்பதால் அவற்றை போலீஸ் நிலையத்திலேயே வைத்திருந்தார்கள்.

    அதுபற்றி போலீஸ் நிலைய பதிவேட்டிலும் விவரங்களை பதிவு செய்து வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் அந்த போலீஸ் நிலையத்துக்கு தலைமை குமாஸ்தாவாக நரேஷ்பால் என்பவர் புதிதாக நியமிக்கப்பட்டார்.

    அவர் போலீஸ் நிலையத்தில் உள்ள பொருட்கள் இருப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டார். பதிவேட்டில் 1000 லிட்டர் சாராயம் இருப்பதாக குறிப்பு இருந்தது. எனவே, சாராயம் முழுமையாக இருக்கிறதா? என்று அவர் ஆய்வு செய்தார். ஆனால், சாராய கேன்கள் அனைத்தும் காலியாக இருந்தன. சில கேன்களில் அடியில் ஓட்டைகள் காணப்பட்டன.

    அந்த போலீஸ் நிலையத்தில் எலிகள் நடமாட்டம் உண்டு. அந்த எலிகள் 1000 லிட்டர் சாராயத்தையும் குடித்து விட்டதாக கூறப்படுகிறது.

    உண்மையிலேயே எலிகள் தான் குடித்ததா? அல்லது போலீசாரே அவற்றை குடித்து விட்டு நாடகம் ஆடுகிறார்களா? என்று தெரியவில்லை.

    இது சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநந்தன்சிங் உத்தரவிட்டுள்ளார்.

    போலீஸ் நிலைய பகுதியில் நடமாடிய அனைத்து எலிகளையும் பிடித்து விட்டோம். இனி, எலிகள் உள்ளே வராது என்றும் சூப்பிரண்டு கூறினார். #Rats
    ×