என் மலர்
நீங்கள் தேடியது "bar confiscate"
சென்னை:
சென்னை சூளைமேடு அண்ணாநெடும் பாதையை சேர்ந்தவர் மணிகண்டன். (வயது32). ஆட்டோ டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் நேற்று இரவு 7 மணி அளவில் அங்குள்ள ஒரு பாரில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தார்.
அப்போது நண்பர்களுக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. போதைஅதிகமான மணிகண்டனை அவரது நண்பர்கள் அருகில் இருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்று சரமாரியாக கத்தியால் வெட்டி மது பாட்டிலால் தாக்கினார்கள்.
அவரது தலையிலும், கைகளிலும் வெட்டு காயம் விழுந்தது. அவர் அங்கிருந்து தப்பி ஓடி வந்து ஜோதி ராமலிங்கம் தெருவில் விழுந்துள்ளார்.
இதைப் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தனர். போலீசார் உடனடியாக அங்கு விரைந்தனர். மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் என்பவரை கைது செய்தனர். வெள்ளை ராஜேஷ், வாட்டர் சர்வீஸ் ராஜேஷ், பிரசாத், செல்லா, சின்ன செந்தில் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே எழும்பூர் தென்சாலையில் உள்ள மதுபாரில், சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த இப்ராகிம் தகராறு செய்து மதுபாட்டில்களை உடைத்துள்ளார். நண்பர்களோடு சேர்ந்து மது குடித்த அவர் அதிகமாக பில் போடப்பட்டுள்ளதாக கூறி பார் ஊழியரான லிங்கேஸ்வரனை கன்னத்திலும் ஓங்கி அறைந்துள்ளார்.
இதுபற்றி எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போதையில் தகராறு செய்த இப்ராகிமிடம் விசாரணை நடத்தப்பட்டது.