search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "banking services"

    தூத்துக்குடி தபால் நிலையங்களில் வங்கி சேவை வருகிற 21-ந் தேதி தொடங்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா ஆறுமுகநாடார் ராஐம்மாள் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தபால் துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் ஆர்.சாந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -

    நாடு முழுவதும் தபால் நிலையங்களில் வங்கி சேவை வருகிற 21-ந் தேதி(செவ்வாய்கிழமை) தொடங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தது ஒரு கிளை என்ற நோக்கத்தில் 650 கிளைகள் தொடங்கப்பட உள்ளன. இந்த இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி சேவையில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டிய அவசிய மில்லை (ஜீரோ பேலன்ஸ்). 
    வங்கி கணக்கு தொடங்க ஆதார் எண், பான் எண் மற்றும் செல்போன் எண் மட்டும் போதுமானது. உங்கள் இருப்புத் தொகைக்கு ஏற்ப 4 சதவீதம் வட்டி கணக்கிடப்பட்டு காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும். 

    இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கிளையிலும் பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். தேவையெனில் வாடிக்கையாளர் பகுதி தபால்காரர் வாடிக்கையாளர் வீட்டுக்கு வந்து வங்கி சேவை அளிப்பார். 
    மேலும் மொபைல் பேங்கிங் அப்பிளிகேசன், மிஸ்டுகால் பேங்கிங், எஸ்.எம்.எஸ். பேங்கிங், ஐவிஆர் பேங்கிங், கியூ.ஆர் கோடு போன்ற அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும். மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், லோன் பீரிமியம் போன்றவற்றை உங்கள் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கணக்கின் மூலம் மிக எளிமையாக நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே செலுத்த முடியும். 

    இந்த சேவை தூத்துக்குடி தலைமை தபால் நிலையம், தூத்துக்குடி மேலூர் துணை தபால் அலுவலகம், ஆரோக்கியபுரம், மீளவிட்டான், சிலுவைப்பட்டி ஆகிய தபால் அலுவலகங்களில் தொடங்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா தூத்துக்குடி ஆறுமுகநாடார் ராஐம்மாள் திருமண மண்டபத்தில் வருகிற 21-ந் தேதி மாலை 3 மணிக்கு நடக்கிறது. விழாவில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி, கீதாஜீவன் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தூத்துக்குடி மக்கள் இந்த சேவையை பயன் படுத்தி கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
    ×