என் மலர்
நீங்கள் தேடியது "Banglore Naatkal"
ராய் லட்சுமியுடன் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என்று காட்சிகள் கொடுத்த போது, பயந்த எனக்கு ராய் லட்சுமி தான் உற்சாகம் கொடுத்து கட்டிப்பிடிக்க வைத்தார் என்று நடிகர் அர்ஜுன் கூறியிருக்கிறார். #Arjun #RaaiLakshmi
சமீபத்தில் வெளியான ’எக்ஸ் வீடியோஸ்’ படத்தில் ரோகன் என்கிற வில்லன் வேடத்தில் நடித்து கவனிக்க வைத்தவர் நடிகர் அர்ஜுன். புழல் என்கிற படத்தில் நடிகராக உள்ளே நுழைந்த இவர் ஆர்யா, பாபி சிம்ஹா கூட்டணியில் உருவான ‘பெங்களூரு நாட்கள்’ படத்தில் ராய் லட்சுமியின் காதலராக நடித்தவர். தனது சினிமா அனுபவம் பற்றி அர்ஜுன் பேசும் போது,
’எனக்கு இயல்பிலேயே கூச்ச சுபாவம் அதிகம். என்னுடைய நண்பர்கள் கேமரா முன்பு நின்று நடிக்கும்போது கூச்சம் போய்விடும் என சொல்லி என்னை மாடலிங்கிற்கு அனுப்பி வைத்தார்கள். நடனம் மற்றும் நடிக்க தெரிந்த ஆள் வேண்டும் என்பதால் ‘புழல்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அடுத்து பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் ‘பெங்களூர் நாட்கள்’ பட வாய்ப்பு கிடைத்தது. பெங்களூர் நாட்கள் படத்தில் நடிக்கவேண்டும் என சொன்னபோது எனக்கு சிறிது பயமாகத்தான் இருந்தது. நான் நடிப்புக்கு புதியவன். அதிலும் ராய்லட்சுமியுடன் கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது என்று காட்சிகள் இருந்தது. ஆனால் ராய் லட்சுமி தான் எனக்கு உற்சாகம் கொடுத்து கட்டிப்பிடிக்க வைத்தார்’ என்றார். #Arjun #RaaiLakshmi






