search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bajaj Avenger 220 Cruise"

    பஜாஜ் நிறுவனத்தின் அவெஞ்சர் குரூஸ் 220 மோட்டார்சைக்கிளின் ஏ.பி.எஸ். வெர்ஷன் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. #Avenger220Cruise



    பஜாஜ் நிறுவனம் காலத்துக்கேற்ப மோட்டார்சைக்கிளில் மாற்றங்களை புகுத்துவதில் முன்னோடியாகத் திகழ்கிறது. தற்போது தனது இரண்டு மாடல் மோட்டார்சைக்கிளில் ஏ.பி.எஸ். வசதியை புகுத்தி சந்தையில் புதிதாக களமிறக்கியுள்ளது. 

    இந்நிறுவனத்தின் பிரபல மாடலான அவெஞ்சர் ஸ்டிரீட், குரூயிஸ் 220 ஆகிய இரு மாடல்களிலும் இப்போது ஏ.பி.எஸ். (ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்) புகுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் புதிதாக தயாரிக்கப்படும் இரு சக்கர வாகனங்களில் ஏ.பி.எஸ். அல்லது சி.பி.எஸ். வசதி கட்டாயமாக இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், பஜாஜ் அவெஞ்சர் குரூஸ் 220 ஏ.பி.எஸ். மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.1.02 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.பி.எஸ். தவிர இந்த மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.



    பஜாஜ் அவெஞ்சர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. முதல் மாடல் ஸ்டிரீட் 220 என்றும் மற்றொரு மாடல் குரூஸ் 220 என அழைக்கப்படுகிறது. 

    ஆரம்ப நிலை குரூயிஸ் மோட்டார்சைக்கிளில் இது கட்டுபடியாகும் விலையில் உள்ள ஒரே மாடலாகும். 220சிசி திறன் கொண்ட இரு மாடல்களிலும் 220 சி.சி. திறன் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஒற்றை சிலிண்டர் என்ஜினுடன் 19 ஹெச்.பி. திறனை 8,400 ஆர்.பி.எம். வேகத்திலும், 17.5 என்.எம். டார்க் @7,000 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டிருக்கிறது.

    புகைப்படம் நன்றி: Overdrive
    ×