search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avvaiyar Mani Mandapam"

    • போதிய வருமானம் இல்லாத கோயிலாக இருந்தாலும் ஆணையர் நிதி ஒதுக்கீடு செய்து தேர் அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • முழுமையான பணிகள் மூன்று அல்லது நான்கு மாதங்களில் முடிக்கப்பட்டு திறக்கப்படும்.

    சட்டப்பேரவையில் இன்று வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலுக்கு நான்கு சிறு திருத்தேர்கள் அமைத்துதர அரசு ஆவன செய்யுமா என்றும், அவ்வையாருக்கு மணி மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் அ.தி.மு.க .உறுப்பினர் ஓ.எஸ் மணியன் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, போதிய வருமானம் இல்லாத கோயிலாக இருந்தாலும் ஆணையர் நிதி ஒதுக்கீடு செய்து தேர் அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அவ்வையாருக்கு மணிமண்டபம் கட்டித் தரப்படும் என கடந்த 2022-23 நிதியாண்டில் அறிவிக்கப்பட்டதாகவும், இந்த மணிமண்டபம் தொடர்பான வரைபடம் முதலமைச்சரும் காண்பிக்கப்பட்ட போது இன்னும் சிறப்பாக அமைக்க வலியுறுத்தியதால், மறு வடிவம் செய்யப்பட்டு வருகிறது எனவும், ரூ.12 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருவதோடு, விரைவில் இதற்கான முழுமையான பணிகள் மூன்று அல்லது நான்கு மாதங்களில் முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்றும், இந்த நிகழ்வில் அ.தி.மு.க. உறுப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

    ×