என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto serial no"

    • வேலூர் மாநகராட்சியில் 1,390 ஆட்டோக்கள் இயங்கி வருகிறது
    • பர்மிட் இல்லாத பல ஆட்டோக்களில் குற்றவாளிகளும் நடமாடி வருகின்றனர்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 59 ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்ளன.

    இங்கு மொத்தம் 1,390 ஆட்டோக்கள். இயங்கி வருகிறது.

    ஆனால் வேலூர் நகரில் ஆட்டோக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆற்காடு, காட்பாடி சாலை முழுக்க ஆட்டோக் களால் நிரம்பி வழிகிறது. வேலூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் - பதிவு செய்யப்பட்ட ஆட் டோக்கள் தவிர வெளியூர் ஆட்டோக்களும் வேலூர் நகர சாலைகளில் உலா வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

    குறிப்பாக சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் வேலூர் நகரை ஆக்கிரமித்துள்ளன. பதிவு இல்லாத, பர்மிட் இல்லாத ஆட்டோக்களால் சட்டவிரோத சம்பவங்களிலும் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.

    இந்த ஆட்டோ ஒவ்வொன்றிற் கும் ஒரு எண் ஒதுக்கப் படும்.

    பிறகு அந்த எண்ணுக்கான ஆட்டோ வுக்கான ஆவணங்கள், டிரைவர் தொடர்பான விவ ரங்களை பெற்று போக்கு வரத்து போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யும் பணி நடந்தது.

    அந்த ஆட்டோக்களிலும் பயணிகளுக்கு தேவைப்படும் அவசர துறைகளின் எண்களும் அச்சிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதனால், விதிமீறும் ஆட்டோக்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் வாகனங்கள், அனுமதிபெறாத வாகனங்கள் எளிதில் கண்டறியப்படும்' என போலீசார் தெரிவித்தனர். ஆனால் இந்த பணி தொடக்கத்தோடு முடிந்து விட்டது. ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடு இல்லாததால் பர்மிட் இல்லாத பல ஆட்டோக்களில் குற்றவாளிகளும் நடமாடி வருகின்றனர்.

    ×