என் மலர்
நீங்கள் தேடியது "Attack thinking of goats as thieves"
மோட்டார்சைக்கிளில் சென்றவர்களைஆடு திருடர்கள் என நினைத்து தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மல்லிகல்லை சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 25). போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 21ந் தேதி இரவு, தன் நண்பர்களான தாசிகானூர் சுப்பிரமணி (23) மற்றும் கார்த்திக் ஆகியோருடன்மோ ட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குருபரப்பள்ளி அடுத்த சின்னகுட்டூர் அருகே சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆடு திருடும் கும்பல் என நினைத்து மோட்டார்சைக்கிளில்செ ன்றவர்களை வழிமறித்து தாக்கினார்கள்.
இது குறித்து சிங்காரவேலன் கொடுத்த புகாரின் பேரில் சின்னகுட்டூரை சேர்ந்த பிரகாஷ் (35), ராஜாமணி (30), ஆறுமுகம் (35), முருகன் (32) ஆகிய 4 பேர் மீது குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






