search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ather S340"

    ஏத்தர் எஸ்340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பெங்களூரு:

    இந்தியாவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் ஏத்தர் எஸ்340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீடு ஜூன் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. பெங்களூருவை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நீண்ட காலமாக தயாரிப்பு பணிகளில் இருந்த நிலையில் விரைவில் வெளியிடப்படுகிறது.

    ஏத்தர் எஸ்340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்களை ஏத்தர் நிறுவனம் ரகசியமாக வைத்திருக்கும் நிலையில் வெளியீட்டின் போது தான் ஸ்கூட்டரின் முழு விவரங்கள் தெரியவரும். புதிய ஸ்கூட்டர் அதிக பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கும் என்றும், இந்தியாவில் தயாரிக்கப்பட்டதில் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பெங்களூருவில் உள்ள தயாரிப்பு ஆலையில் ஏத்தர் எஸ்340 மாடலின் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், இதன் விநியோகம் படிப்படியாக துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஏத்தர் எஸ்340 ஸ்கூட்டர்கள் பெங்களூருவில் விநியோகம் செய்யப்படுகிறது. வணிக ரீதியிலான தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்குகிறது.

    கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் உள்ள வைட்ஃபீல்டு பகுதியில் ஏத்தர் நிறுவன தயாரிப்பு ஆலை கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய ஏத்தர் எஸ்340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவுகள் வெளியீட்டு தினத்தன்று துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    கான்செப்ட் மாடல்களில் இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஏத்தர் எஸ்340 அல்லது 340 மாடல் எதிர்கால வடிவமைப்பு மற்றும் எட்ஜி ஸ்டைலிங் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்கூட்டரில் ஆன்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே ஸ்கிரீன், கஸ்டம் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    மேலும் புஷ் நேவிகேஷன், ஓவர்-தி-ஏர் அப்டேட்கள், பார்க்கிங் அசிஸ்ட் சிஸ்டம், வாட்டர்ப்ரூஃப் சார்ஜர், அதிக ரைடிங் மோட்கள் மற்றும் எல்இடி லைட்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஏத்தர் எஸ்340 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5kW பிரஷ்லெஸ் டிசி எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படலாம் என்றும் இந்த மோட்டார் 6.4 பிஹெச்பி பவர் மற்றும் 14 என்எம் டார்கியூ கொண்டிருக்கும் என கூப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 72 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகும். 

    புதிய எஸ்340 ஸ்கூட்டர் மணிக்கு 0-40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5 நொடிகளில் செல்லும் என ஏத்தர் தெரிவித்துள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும் இதன் ஃபாஸ்ட் சார்ஜிங் சிஸ்டம் ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 80 சதவிகிதம் பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×