என் மலர்

  நீங்கள் தேடியது "Asia Cup Qualifiers"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய கோப்பை தொடருக்காக தகுதிச் சுற்று இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி ஹாங்காங் தகுதிப் பெற்றுள்ளது. #AsiaCup2018
  ஆசிய கோப்பை 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. இதில் 6 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றது.

  இன்னும் ஒரு அணி தேர்வாவதற்கு தகுதிச்சுற்று நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - ஹாங் காங் அணிகள் மோதின.

  மழைக் காரணமாக ஆட்டம் முழுமையாக நடைபெறவில்லை. முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 24 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது.  பின்னர் 24 ஓவரில் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங் காங் அணி களம் இறங்கியது. ஹாங் காங் 23.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை தொடருக்கு ஹாங் காங் தகுதிப் பெற்றுள்ளது. ஹாங் காங் 16-ந்தேதி பாகிஸ்தானையும், 18-ந்தேதி இந்தியாவையும் எதிர்கொள்கிறது.
  ×