என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asha employees' petition"

    • திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா ஊழியர்கள் மனு அளித்தனர்
    • திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம், ஆஷா ஊழியர்கள் மனு

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆஷா ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

    குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 வழங்க வேண்டும். கொரோனா கலத்தில் வழங்கப்பட்ட மாதம் ரூ.1000த்தை தொடர்ந்து வழங்க வேண்டும். தடுப்பூசி முகாம்களில் கொடுக்கப்படும் ஊதியம் ரூ.500 தொடர்ந்து வழங்க வேண்டும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வழங்கப்படும் ஊக்கத் தொகையைப் போல தமிழகத்திலும் வழங்க வேண்டும்.

    இ.எஸ்.ஐ. திட்டத்தில் ஆஷா ஊழியர்களை இணைக்க வேண்டும். பணிக்கொடை இறப்பு நிவாரண தொகை ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செயலாளர் ஜானகி தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

    ×