என் மலர்
நீங்கள் தேடியது "Arun Prabu Purushothaman"
சிவகார்த்திகேயனை வைத்து ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’ படத்தை தயாரித்த ஆர்.டி.ராஜா, அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ரெமோ’. பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இப்படத்தில் சிவகாத்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படத்தை 24 ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார்.
இப்படத்தை அடுத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வேலைக்காரன்’ படத்தையும் ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தையும், ராஜேஷ் இயக்கத்தில் சிவா நடிக்க இருக்கும் படத்தையும் தயாரித்து வருகிறார்.
தற்போது அடுத்ததாக அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் புதிய படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா தயாரிக்க இருக்கிறார். இந்த புதிய படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது.

விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றி முழு விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






