என் மலர்
நீங்கள் தேடியது "Arumukha suffered severe head injuries after being thrown"
- வாக்கிங் சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அருகே உள்ள கீழ்மொணவூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 76). இவர் தினந்தோறும் காலையில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாக்கிங் செல்வது வழக்கம். இன்று காலையில் ஆறுமுகம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அந்த நேரத்தில் வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட ஆறுமுகத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விரிஞ்சிபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






