என் மலர்
நீங்கள் தேடியது "arrested trichy ramji nagar"
திருப்பூர்:
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் செந்தில்பிரபு என்பவர் மீது அரிப்பு மருந்தை தூவி அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் பணத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்தது. தென்னம்பாளையம் பகுதியில் மூதாட்டியிடம் திருடர்கள் நடமாட்டம் உள்ளது என்று எச்சரிப்பது போல் அவர் அணிந்திருந்த 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.
பூ மார்க்கெட்டில் காரில் வந்த தம்பதி பூ வாங்க சென்றபோது காரில் இருந்த 8 ½ பவுன் நகை மற்றும் லே-டாப் ஆகியவைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசில் புகார்கள் வந்தன. நூதன முறையில் கொள்ளையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க திருப்பூர் கமிஷனர் மனோகரன் உத்தரவிட்டார். இதனையடுத்து திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று சந்தேகப்படும்படி 3 வாலிபர்கள் சுற்றித்திரிந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த கிரிநாதன் (வயது 41), பிரசாத் (39), அசார் அலி (27) ஆகியோர் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் தான் திருப்பூரில் நூதன முறையில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்த 30 பவுன் நகை, ரூ.1½ லட்சம் பணத்தை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






