search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrested in Law"

    • அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீ கட்டையை எடுத்து கையிலும் முகத்திலும் தாக்கினர்.
    • மேலும் கத்தி முனையில் மோகன்ராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ.3000-த்தையும் பறித்துக் கொண்டனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 37). சுமை தூக்கும் தொழிலாளியான இவரை கடந்த மாதம் 18-ந் தேதி தாதகாப்பட்டி சண்முகம் நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி எலிபிரகாஷ் (24), பராசக்தி நகர் பகுதியைச் சேர்ந்த சொல்யூஷன் சதீஷ் (26) ஆகியோர் எதற்காக எங்களை பற்றி போலீசருக்கு தகவல் தெரிவிக்கிறாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீ கட்டையை எடுத்து கையிலும் முகத்திலும் தாக்கினர். மேலும் கத்தி முனையில் மோகன்ராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ.3000-த்தையும் பறித்துக் கொண்டனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மோகன்ராஜ், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து, இவர்கள் இருவரையும் தேடி வந்தனர்.

    இந்நிலையில் மணிய னூர் காத்தாயம்மாள் நகர் பகுதியைச் சேர்ந்த அருள்மணி (30) என்பவர் தாதகாப்பட்டி கேட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த பிரகாஷ் மற்றும் சதீஷ் ஆகியோர், கத்தி முனையில் அருள்மணி கையில் இருந்த 1/2 பவுன் தங்க மோதிரம் மற்றும் ரூ.2000-ஐ பறித்துக் கொண்டனர். இதுகுறித்து அருள்மணி அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்குப்பதிவு செய்து ரவுடி எலி பிரகாஷ் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.

    இவர்கள் இருவரும் பொதுமக்களை அச்சுறுத்தியும், தொடர் குற்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாலும், இவர்கள் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா நேற்று ரவுடி எலி பிரகாஷ் மற்றும் சொல்யூ ஷன் சதீஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகல் நேற்று மாலை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேற்கண்ட நபர்களிடம் வழங்கப்பட்டது.

    ×