என் மலர்
நீங்கள் தேடியது "arokia annai church"
கீரனூரில் உள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
கீரனூர்:
திருச்சி மறை மாவட்டம் கீரனூர் மறை வட்டத்தில் உள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
தமிழக ஆயர் பேரவையின் தலைவரும், மதுரை உயர் மாவட்ட பேராயருமான டாக்டர் அந்தோணி பாப்புசாமி ஆலயத்தை திறந்து வைத்து புனித நீரால் ஆசீர்வதித்தார். அதன்பின் பங்கு மக்கள் ஆலயத்திற்குள் நுழைந்தனர். பின்னர் திருப்பலி நடந்தது.
நிகழ்ச்சியில் திருச்சிமறை மாவட்ட முதன்மை குரு யுஜின் அடிகளார் மற்றும் பல குருக்கள், கன்னியாஸ்திரியர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவையொட்டி ஆலயம் முழுவதும் மின்விளக்குகளால் ஜொலித்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்கு தந்தை, மறை மாவட்ட அதிபர் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.






