search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Appreciation for students of government school"

    • அரசு பள்ளியில் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் நீட்டில் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த, எடப்பாடி அரசு பள்ளி மாணவர்கள் சரண்ராஜ் ஹரி, பிரகாஷ் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
    • மேலும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காயத்ரி, குமரேசகனி, அருளாளன், மோகனவேல் ஆகியோரை பாராட்டியும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    எடப்பாடி:

    எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நித்தியானந்தம், மாவட்ட செயலாளர் உமா காந்தன், மாவட்ட இணைச்செயலாளர்கள் இளையராஜ், சேகர், மணிமாறன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் பூங்கோதை, ராஜா, பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் குப்புராஜ் வரவேற்றார்.

    இதில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் கமலக்கண்ணன் மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு, அரசு பள்ளியில் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் நீட்டில் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த, எடப்பாடி அரசு பள்ளி மாணவர்கள் சரண்ராஜ் ஹரி, பிரகாஷ் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

    மேலும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காயத்ரி, குமரேசகனி, அருளாளன், மோகனவேல் ஆகியோரை பாராட்டியும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர், ஆசிரியை–கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர்களை பணி அமர்த்த வேண்டும். ஆசிரியர்களுக்கு என்று தனியாக பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×