என் மலர்
நீங்கள் தேடியது "Apply for grant"
- உதவி இயக்குனர் தகவல்
- விவசாயிகளுக்கு ரூ.4500 மானியம் வழங்கப்படும்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மற்றும் கந்திலி வட்டார விவசாயிகள் துவரை சாகுபடி செய்ய வேளாண்மை உதவி நலத்துறை மூலம் மானியம் பெறலாம் என கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராகினி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
திருப்பத்தூர் வட்டாரத்தில் 540 எக்டருக்கு கந்திலி வட்டாரத்தில் 350 எக்டரும் துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.4500 மானியம் வழங்கப்படவுள்ளது.
இதில் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு துவரை விதைகள் 10 கிலோ, உயிர் உரம், ஒரு மீட்டர் நுண்ணுயூட்டகலவையும், 5 கிலோ டிரைக்கோ டெர்மா விரிடி, 2.5 கிலோ இடுப்பொருட்கள், 50சதவீத மானியத்தில் பெற்று துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும். மானியம் போக மீதி தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் பின்னர் செலுத்தப்படும்.
இந்த திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைப்பு வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் கிராமங்களில் 50% பரப்பினும் பிற கிராமங்களில் 20% பரப்பினும் செயல்படுத்தப்பட உள்ளது விவசாயிகள் தங்களின் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி புத்தகக் கணக்கு நகல், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலரின் மூலம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் ஆதியூர் மற்றும் திருப்பத்தூர் வட்டார விரிவாக்க மைய அலுவலகம் அணுகி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது பருத்தி விதைப்பு மேற்கொள்ளும் விவசாயிகள் பருத்தி ஊடுபயிராக துவரை சாகுபடி செய்ய கேட்டுக் கொல்லப்படுகிறார்கள்.






