search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annual Accounts"

    • வணிகர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது கணக்கை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    • ஆண்டு கணக்கை எப்.ஓ.எஸ்.சி.ஓ.எஸ்., இணையதளம் வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    அனைத்து உணவு வணிகர்களும் ஆண்டு கணக்கை வருகிற 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க உணவுப்பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.உணவுப்பாதுகாப்பு துறையில், பதிவு, லைசென்ஸ் பெற்ற வணிகர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது கணக்கை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இதன்படி 2022-23ம் ஆண்டுக்கான ஆண்டு கணக்கு அறிக்கையை வரும் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உணவுப்பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.ஆண்டு கணக்கை எப்.ஓ.எஸ்.சி.ஓ.எஸ்., இணையதளம் வழியாக சமர்ப்பிக்க வேண்டும். நேரில் இ-மெயில் வாயிலாக அனுப்பப்படும் அறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.வருகிற 31-ந் தேதிக்கு பின் சமர்ப்பிக்கப்படும் கணக்கிற்கு அபராதமாக, தினமும் ரூ.100 வசூலிக்கப்படும். அவ்வாறு கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு 0422 - 2220922 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×