search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ancient Bolatchi Amman Temple"

    • ஒரே கல்லால் செய்யப்பட்ட விமானம் பொருத்தம்
    • விமானத்திற்கு பால் அபிஷேகம்

    திருவண்ணாமலை :

    கலசப்பாக்கம் தாலுகா, லாடவரம் ஊராட்சிக்குட்பட்ட கெங்கநல்லூர் கிராமத்தில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த போலாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் குடமுழுக்கு விழா செய்வதற்காக பழுது அடைந்த கோவில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு தற்போது கருவறை, அர்த்த மண்டபம் கருங்கல்லால் கட்டிமுடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கருவறையின் மீது சுமார் 27அடி உயரத்தில் கருங்கல்லில் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதில் தற்போது கோபுர உச்சியில் 4 அடி உயரத்தில் 4 அடி அகலத்தில் சுமார் 3 டன் எடை கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட விமானம் கோபுர உச்சியில் அமைக்கும் விழா நடைபெற்றது.

    இதில் விமானத்திற்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து கிரேன் மூலம் ஒரே கல்லால் செய்யப்பட்ட விமானத்தை தூக்கி கோபுர உச்சியில் நிலை நிறுத்தப்பட்டது.

    ×