search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amman pariharam"

    மாமல்லபுரம் எல்லையில் அமைந்துள்ளது கருக்காத்தம்மன் திருக்கோவில். கருவை காக்கும் அம்மன் என்பதால் இந்த அம்மனை ‘கருக்காத்த அம்மன்’ என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.
    காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் எல்லையில் அமைந்துள்ளது கருக்காத்தம்மன் திருக்கோவில். கருவை காக்கும் அம்மன் என்பதால் இந்த அம்மனை ‘கருக்காத்த அம்மன்’ என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.

    குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், தொடர்ச்சியாக மூன்று பவுர்ணமி நாட்களில் இந்த ஆலயத்திற்கு வந்து, அம்மனை வேண்டிக்கொண்டு, சிறிய துணியில் எலுமிச்சைப் பழம் அல்லது சிறிய கல் ஒன்றை வைத்து தொட்டில் போல அமைக்கின்றனர். அங்குள்ள சூலாயுதத்தில் எலுமிச்சைப் பழத்தை சொருகி வைத்து வேண்டுகின்றனர்.

    பின்னர் அந்த துணி தொட்டிலை கோவிலின் தல விருட்சமான எட்டி மரத்தில், அம்மனை நினைத்தபடி கட்டிவிடுகின்றனர். வேண்டுதல் பலித்து குழந்தை பாக்கியம் அடைந்த பெண்கள், தாயும் சேயுமாக கருக்காத்தம்மன் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி செல்கின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட குடும்பத்தினர், திருமணம் நல்ல முறையில் நடக்க அம்மனுக்கு பொங்கலிட்டு, பட்டு புடவை சாத்தி சிறப்பு வழிபாடு நடத்துவதும் இங்கு வாடிக்கையான ஒன்று.

    அதே போல திருமணமான பெண்கள், மஞ்சள் பூசப்பட்ட கயிற்றில் ஒரு சிறிய துண்டு மஞ்சளைக் கட்டி, அம்மனை நினைத்து தலவிருட்ச எட்டி மரத்தில் கட்டி மூன்று முடிச்சு போடுகின்றனர். இதனால் தங்கள் மாங்கல்யம் பலம் பெறும் என்று பெண்கள் நம்புகிறார்கள்.
    ×