என் மலர்
நீங்கள் தேடியது "Alms is provided"
- 25-ந்தேதி வரை ஆடி கிருத்திகை விழா
- சாலைகளில் அரோகரா கோஷத்துடன் பக்தி பரவசம்
வேலூர்:
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருத்தணி ஆடி கிருத்திகை விழாவில் பக்தர்கள் காவடி எடுத்து வர அனுமதி மறுக்கப்பட்டது.ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆடிக்கிருத்திகை விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன்படி, முக்கிய முருகன் கோவில்களான வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், ரத்தினகிரி பாலமுருகன் கோவில், பாலமதி குழந்தை வேலாயுத பாணி கோவில், மகாதேவமலை, திமிரி குமரக்கோட்டம், ஞானமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்யவும், காவடி நேர்த்திக்கடன் செலுத்தவும் தடை விதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கு ஏற்பட்டுள்ளது.23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஆடி கிருத்திகை விழா நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து திருத்தணி ரத்தினகிரி வள்ளிமலை முருகன் கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து செல்கின்றனர். வேலூர் மாநகரப் பகுதி வழியாக பக்தர்கள் நீண்ட வரிசையில் அரோகரா கோஷம் எழுப்பியபடி காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அவர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது .
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பத்திர நடைபாதையாக செல்வதால் வேலூர் சாலைகளில் பக்தி கோஷம் காண முடிகிறது.






