என் மலர்
நீங்கள் தேடியது "All houses should hoist the national flag"
- வீடு தோறும் வழங்கப்பட உள்ளது
- வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏற்பாடு
குடியாத்தம்:
சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 50 ஊராட்சிகளும் 48,742 குடியிருப்புகளும் 50 ஊராட்சி மன்ற அலுவலகங்கள் என மொத்தம் 48, 800 தேசியக்கொடிகள் கிராமப் பகுதிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், எஸ்.சாந்தி ஆகியோர் ஊராட்சிகளுக்கு தேசியக் கொடிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் அசோக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேசியக் கொடிகள் 50 ஊராட்சி மன்ற தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் வாயிலாக ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் மூலமாக வீடு தோறும் வழங்கப்பட உள்ளது.






