என் மலர்
நீங்கள் தேடியது "All facilities including road drinking water closet will be completed soon."
- பிரம்மபுரம் சஞ்சீவிபுரத்தில் நரிக்குறவர் குடியிருப்பில் உள்ளவர்களிடம் குறைகேட்பு நிகழ்ச்சி நடந்தது.
- மலைக்குறவர்கள் பிரிவில் சேர்க்க வலியுறுத்தல்
வேலூர்:
காட்பாடி அடுத்த பிரம்மபுரம் சஞ்சீவி புரத்தில் நரிக்குறவர் குடியிருப்பில் உள்ளவர்களிடம் குறைகேட்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அப்போது அவர்கள் நாங்கள் மலைக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள். எங்களை நரிக்குறவர் பிரிவில் சேர்த்து உள்ளனர். எனவே எங்களை மலைக்குறவர் பிரிவில் சேர்க்க வேண்டும். அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவேண்டும் என அமைச்சர் துரைமுருகனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்:-
இப்பகுதியில் சாலை குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் விரைவில் நிறைவேற்றி தரப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்ததால் உங்களுடைய அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர முடியவில்லை. தற்போது ஆளுங்கட்சியாக உள்ளதால் உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






