என் மலர்
நீங்கள் தேடியது "Aliyar"
- சில்லி கொம்பன் என்ற யானை வனத்தை விட்டு வெளியேறி ஆழியார் பகுதிக்குள் நுழைந்தது.
- கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இதே இடத்தில் கட்டப்படிருந்த சுற்றுச்சு வரை யானை இடித்திருந்தது.
ஆனைமலை:
ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது.
இதனால் வனத்தில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி வால்பாறை-ஆழியார் சாலையில் உலா வருகிறது. குறிப்பாக காட்டு யானைகள் அடிக்கடி சாலையில் சுற்றி திரிகின்றன.
இதுதவிர வனவிலங்குகள் வனத்தையொட்டி குடியிருப்பு பகுதிகளிலும் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. வீடுகள், விளைநிலங்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் சில்லி கொம்பன் என்ற யானை வனத்தை விட்டு வெளியேறி ஆழியார் பகுதிக்குள் நுழைந்தது.
அந்த பகுதியிலேயே வெகுநேரமாக சுற்றிய யானை, அங்கு புதிதாக கட்டி முடிக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் இருந்த மணிமண்டபத்தின் அருகே வந்தது.
அந்த மணி மண்டபத்தின் சுற்றுச்சுவரை சில்லி கொம்பன் யானைஇடித்து தள்ளியது. இதில் சுவரில் இருந்த கம்பிகள் அப்படியே சரிந்து விழுந்து சேதம் அடைந்தது. அதன்பிறகு உள்ளே நுழைந்த யானை மணிமண்டபவளாகத்தில் நின்றிருந்த மாமரத்தை தனது துதிக்கையால் ஒடித்து மாங்காய்களைருசித்தது.
பின்னர் யானை அங்கிருந்து நகர்ந்து ஆழியார் விருந்தினர் மாளிகை அருகே முகாமிட்டுள்ளது. தற்போது யானை அங்கு நின்று கொண்டிருக்கிறது. யானை நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இதே இடத்தில் கட்டப்படிருந்த சுற்றுச்சு வரை யானை இடித்திருந்தது. தற்போது மீண்டும் அதே இடத்தில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவரை இடித்து தள்ளியுள்ளது.






