என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alappuzha keeripillai"

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா சார்பதிவாளர் அலுவலகத்தில் கீரியும், நாகபாம்பும் மோதியதால் ஊழியர்கள் சிதறி ஓடினர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. 100 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தில் ஆவணங்கள், கோப்புகள் அதிகம் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மிகவும் பழமையான இங்குள்ள அறைகள் புதர்மண்டியும், சேதமடைந்தும், மழைநீர் உள்ளே கசிந்தவாறு உள்ளது.

    நேற்று ஊழியர் ஒருவர் ஆவணம் எடுக்க ஒரு அறையை திறந்தார். லைட்டை போட்டு ஜன்னலை திறந்துபோது நாகபாம்பு மீது கீரி ஆவேசமாக நின்றது. பாம்பும் பதிலுக்கு ‘உஸ்’ என்று சீற்றமடைந்து மோதியது. அதிர்ச்சியடைந்த ஊழியர் அறையை விட்டு ஓட்டம் பிடித்தார். இது குறித்து தகவல் கிடைத்தும் பெண் ஊழியர்கள் உள்பட பலர் சிதறி ஓடினர்.

    பின்னர் அங்குள்ள ஊழியர்கள் சிலர் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து பார்த்தனர். பின்னர் பாம்பையூம், கீரியையும் விரட்டி விட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews

    ×