search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Air horns seized"

    • வாகனங்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
    • 89 டெசிபல் அளவுக்கு மேல் உள்ள ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது.

    ஊட்டி,

    ஊட்டியில் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு புகாா்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்பேரில் வட்டார போக்குவரத்து அலுவலா் தியாகராஜன், ஊட்டி லவ்டேல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டாா்.

    இந்த வாகன சோதனையின்போது தனியாா் வேன், பஸ் உள்பட 20 வாகனங்களிலிருந்து ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

    இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் கூறியதாவது:

    மத்திய மோட்டாா் வாகன விதிகளின்படி 89 டெசிபல் அளவுக்கு மேல் உள்ள ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது. அதேபோல தேவையில்லாத இடங்களில் ஹாரன் அடிக்க கூடாது. இந்த விதிகளை மீறிய 20 வாகனங்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டு ள்ளது என்றாா்.

    ×