search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agni 1 Missile"

    • ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏவுகணைகளை தயாரித்துள்ளது.
    • இந்தியாவிடம் ஏற்கனவே பிருதிவி, ஆகாஷ், நாக், திரிசூல், அக்னி ஏவுகணைகள் உள்ளன.

    புதுடெல்லி:

    ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து உள்ளது. இந்தியாவிடம் ஏற்கனவே பிருதிவி, ஆகாஷ், நாக், திரிசூல், அக்னி ஏவுகணைகள் உள்ளன.

    இந்நிலையில், குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் அக்னி 1 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் தள செய்தியில், அக்னி-1 என்ற குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையின் வெற்றிகரமான பயிற்சி ஏவுதல் வியாழக்கிழமை ஒடிசாவின் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இருந்து மூலோபாயப் படைகளின் கட்டளையால் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஏவுகணை ஒரு நிரூபிக்கப்பட்ட அமைப்பு. மிக உயர்ந்த துல்லியத்துடன் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. பயனர் பயிற்சி ஏவுகணையின் அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

    ×