என் மலர்
நீங்கள் தேடியது "afghan forces kill"
ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாவட்டத்தில் தலிபான்கள் பதுங்குமிடத்தின் மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். பலர் கைதாகியுள்ளனர். #AfghanSoldiers #Talibanskilled
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், கஸ்னி மாகாணத்தில் உள்ள தேஹ்யாக் மாவட்டத்துக்குட்பட்ட சுலிமன்ஸாய் கிராமத்தில் தலிபான்கள் ரகசியமாக கூடி ஆலோசனை கூட்டம் நடத்துவதாக ராணுவ உயரதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த கிராமத்துக்கு ராணுவ வீரர்கள் விரைந்தனர். அப்போது தலிபான்களுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 14 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15 பேர் கைது செய்யப்பட்டனர். #AfghanSoldiers #Talibanskilled






